"விஜய்-க்கு மூளையில் கோளாறு; அவர் முகத்துல குத்தணும்..." நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு.!!



vijay-has-brain-problem-actor-ranjith-controversial-tal

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாநாடு நடந்து முடிந்து 10 நாட்களாகியும் மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான ரஞ்சித் நடிகர் மற்றும் அரசியல் தலைவரான விஜய் குறித்து பேசியிருக்கும் கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், பிரதமர் மோடியை குறிப்பிடும்போது சொடுக்கு போட்டு பேசினார். மேலும் மிஸ்டர் பிரதமர் என்ற வார்த்தையையும் பயன்படுத்தினார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேசும் போது ஸ்டாலின் அங்கிள் எனக் குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் விஜய்க்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

TN politics

இந்நிலையில் கோயமுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ரஞ்சித், விஜய் பேசியதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக நிகழ்ச்சியில் பேசிய ரஞ்சித், உலகமே போற்றும் பாரதப் பிரதமர் மோடியை மிஸ்டர் பிரதமர் என விஜய் குறிப்பிடுகிறார். மேலும் அவரைப் பற்றி பேசும் போது சொடுக்கு போட்டு பேசுகிறார். இதெல்லாம் எந்த மாதிரியான அரசியல் நாகரீகம் என தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக முதல்வரை பார்த்து அங்கிள் என அழைக்கிறார். இது ஒரு முதல்வருக்கு கொடுக்கப்படுகின்ற மரியாதையா.? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: "ஓட்டுக்காக கேப்டனை பயன்படுத்தும் விஜய்.." சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்.!!

பிரதமர் மோடியை பற்றி அவர் பேசும்போது விஜய் மூஞ்சில் ஓங்கி குத்து விட வேண்டும் என்பது போல் தோன்றியது. அவருக்கு மூளையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அந்தக் கோளாறில் தான் இதே மாதிரி பேசுகிறார் என விஜய்யை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ரஞ்சித் பேசியது தற்போது சினிமா உலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "மாநாடு எப்படி நடத்தணும்னு இந்தியாவுக்கே சொல்லிக் கொடுப்பேன்..." விஜய்க்கு சீமான் பதிலடி.!!