"மாநாடு எப்படி நடத்தணும்னு இந்தியாவுக்கே சொல்லிக் கொடுப்பேன்..." விஜய்க்கு சீமான் பதிலடி.!!



will-teach-india-how-to-conduct-a-political-conference

நடிகர் விஜய் கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த வருடம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அவரது கருத்துக்கு அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்களும் தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக முதல்வரை அங்கிள் என விஜய் அழைத்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநாடு நடத்துவது எப்படி என்று இந்தியாவிற்கே சொல்லிக் கொடுப்பேன் என தெரிவித்திருக்கிறார்.

TN politics

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், கடந்த மாநாட்டில் சி.எம் சாராக இருந்த முதல்வர் இந்த மாநாட்டில் அங்கிளாகிவிட்டாரா./ என கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் நான்கரை ஆண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி செய்தது பற்றி விஜய் ஏன்.? கேள்வி எழுப்பவில்லைஎன தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "சினிமா வசனம் பேசி ஆட்சியைப் பிடிக்க முடியாது..." தவெக-வுடன் கூட்டணி இல்லை.!! இபிஎஸ் அதிரடி பதில்.!!

மேலும் வர இருக்கின்ற பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாநாடு நடத்தப் போவதாக தெரிவித்த அவர், ஒரு மாநாடு எப்படி நடக்க வேண்டும் என்றும் மாநாட்டில் ஒரு தலைவனின் உரை எப்படி இருக்க வேண்டும் என்று இந்தியாவே கற்றுக்கொள்ளும்படி நடத்தி காட்டுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "ஓட்டுக்காக கேப்டனை பயன்படுத்தும் விஜய்.." சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்.!!