"இதெல்லாம் ஒரு போதையா? நான் வேறு போதை காட்டுகிறேன் என்று சொன்ன அண்ணன்!" பிரபல நடிகர் உருக்கம்!
ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில் இவ்வளவு ஊழலா?!: அமைச்சர் கூட்டாளியின் வீட்டில் கட்டுகட்டாக பணம் பறிமுதல்..!
ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில் இவ்வளவு ஊழலா?!: அமைச்சர் கூட்டாளியின் வீட்டில் கட்டுகட்டாக பணம் பறிமுதல்..!

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்காள மாநிலத்தில் பள்ளி சேவை ஆணையம் மற்றும் தொடக்கக் கல்வி வாரியம் போன்றவற்றில் ஆள் சேர்ப்பில் பெருமளவு மோசடி நடந்துள்ளது என்று புகார் எழுந்தது. திரிணாமுல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆரம்ப, தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிப்பதில் ஊழல் நடந்துள்ளதாக அம்மாநில பா.ஜ.கவும் குற்றம் சுமத்தி இருந்தது.
இந்நிலையில் அந்த மாநிலத்தின் இப்போதுள்ள வர்த்தகத்துறை அமைச்சரும், முன்னாள் கல்வி அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரும், அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜி என்பவரது குடியிருப்பு வளாகத்தில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை செய்தனர்.
அப்போது அர்பிதா முகர்ஜி வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் பணக்கட்டுக்களை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பரிமுதல் செய்யப்பட்டிருந்த பணம் மலை போல் குவிக்கப்பட்டிருந்தது. அந்த பணத்தை எண்ணுவதற்கு வங்கி ஊழியர்கள் உதவி நாடப்பட்டது. பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் அந்த பணம் எண்ணப்பட்டது. மொத்தம் 20 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பதிவுகள், ஆவணங்கள், சந்தேகத்திற்குரிய நிறுவனங்களின் விவரங்கள், தங்கம், வெளிநாட்டு நாணயம், மின்னணு சாதனங்கள், உள்ளிட்டவற்றையும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, பரேஷ் அதிகாரி ஆகியவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பெரும் அளவில் லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதன் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்திருக்கிறார். இது பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது இந்த விசாரணையில் சம்மந்தப்பட்டவர்களே என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.