நைட்டியுடன் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த தி.மு.க கவுன்சிலர் வழக்கு… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!....

நைட்டியுடன் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த தி.மு.க கவுன்சிலர் வழக்கு… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!....



chennai high court issue notice to tamil nadu govt due to salem issue

சேலம் அருகே நைட்டியுடன் கோவிலுக்கு வந்த தி.மு.க பெண் கவுன்சிலரை தடுத்ததால் பணி பறிபோன அர்ச்சகர் கண்ணன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேலத்தை அடுத்த அம்மாபேட்டை என்ற ஊரில் சீதா ராமச்சந்திரன் கோவில் உள்ளது. இதில் கண்ணன் என்பவர் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார். அண்மையில் சேலம் மாநகராட்சியின் 40வது வார்டு தி.மு.க கவுன்சிலரான மஞ்சுளா ராஜ்மோகன் என்பவர் இந்த கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கோவிலுக்கு வந்த போது மஞ்சுளா நைட்டி அணிந்திருந்தார் எனவும், இதனை கவனித்த அர்ச்சகர் கண்ணன் கவுன்சிலராக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் கோவிலுக்குள் உடை கட்டுப்பாடுகள் அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக கவுன்சிலர் மஞ்சுளாவுடன் வந்த அவரது ஆதரவாளர்களுக்கும், அர்ச்சகர் கண்ணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மஞ்சுளாவின் ஆதரவாளர்கள், அர்ச்சகரை தாக்க முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அர்ச்சகர் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அர்ச்சகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு காரணமாக அவர் ஆகம விதிகளை மீறி இரவு 12.00 மணி வரை கோவிலை திறந்து வைத்திருந்ததாகவும், மேலும் அவர் கோவிலுக்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அர்ச்சகர் கண்ணன் தன் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் இது உள் நோக்கம் கொண்டது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இவ்வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.