அணைத்து கட்சிகளையும் பிரமிக்க வைத்து! பிரமாண்டமாய் உயர்ந்தெழுந்த அ.ம.மு.க!

Ammk party office


ammk-party-office

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அமமுக கட்சி அலுவலகத்தை, பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில், கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று திறக்க உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுக பிளவடைந்தது. இதனையடுத்து டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்கினார். இந்த கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இதனையடுத்து சென்னை ஆர்கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அமோக வெற்றிபெற்றார்.

இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் பிரமாண்டமாக அமமுக கட்சி அலுவலகம், அமைக்கும் பணியில் தினகரன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

ammk

இந்தநிலையில் தற்போது அமமுக கட்சி அலுவலகம் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதி என்றாலே, அதிமுக அலுவலகம் தான் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. இந்தநிலையில், அதனை மிஞ்சும் வகையில், அதிமுக அலுவலகத்திற்கு போட்டியாக, அமமுக கட்சி அலுவலகம் உருவெடுத்துள்ளது.

இந்தநிலையில் அணைத்து கட்சிகளையும் மிரளவைக்கும் வகையில், சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில், மிகப்பிரமாண்டமான கட்டடத்தில் இன்று ( மார்ச் 12ம் தேதி) அமமுக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில், கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று திறக்க உள்ளார்.