திடீர் ட்விஸ்ட்.... வேலுமணி ஆட்டம் க்ளோஸ்! திடீரென மாறிய அரசியல் கணக்கு... செம ஹாப்பியில் எடப்பாடி!!!
அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ மோகன் இதில் பங்கேற்றது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
வேலுமணி அணியில் இருந்த மோகன் பங்கேற்பு
கட்சியில் தங்களது ஆதரவாளர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதுவரை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில், வேலுமணி அணிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் மோகன், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: திடீர் ட்விஸ்ட்! அதிமுகவில் இணைந்தனர்... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!
உட்கட்சி அரசியலில் புதிய நகர்வா?
நேற்று வரை வேலுமணி தரப்புடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்ட மோகன், தற்போது இபிஎஸ் தலைமையிலான ஆலோசனையில் கலந்து கொண்டிருப்பது அதிமுக உட்கட்சி அரசியலில் புதிய மாற்றத்தின் அறிகுறியாக பேசப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்பாக கட்சி வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அரசியல் வட்டாரத்தில் தீவிர கவனம்
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம், எதிர்கால அமைப்பு மாற்றங்கள் மற்றும் அரசியல் திட்டங்கள் குறித்த ஆலோசனையாகவும் பார்க்கப்படுகிறது. இதனால், அதிமுகவில் அடுத்த சில நாட்களில் நடைபெறவுள்ள நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: இப்படியே போன அதிமுக நிலைமை தான் என்ன? எடப்பாடிக்கு அடுத்த ஷாக்.... அதிருப்தியால் நடக்கும் அதிரடி அரசியல் மாற்றம்!!!