என்னது பாஜகவுடன் கூட்டணி இல்லையா.? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தால் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை.!

என்னது பாஜகவுடன் கூட்டணி இல்லையா.? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தால் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை.!


admk-ex-minister-jeyakumar-says-there-is-no-allience-be

தமிழகத்தின் எதிர்க்கட்சியான ஆகிய அதிமுக கடந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் மாநில அளவிலும் தேசிய அளவிலும் கூட்டணியில் இருந்தது. தற்போதும் இந்தக் கூட்டணி தொடர்வதாகவே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இந்நிலையில் அதிமுகவை சார்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தங்களது கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

tamilnaduசென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் அதிமுக கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

tamilnaduமேலும் தொடர்ந்து பேசிய அவர் இனி அதிமுக தொண்டர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சமீபகாலமாகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக கட்சியினருக்கும் மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.