மருத்துவம் லைப் ஸ்டைல்

2 நிமிடத்தில் மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக்குவது எப்படி?? மிகவும் பயனுள்ள பதிவு..

Summary:

இயற்கையான முறையில் மஞ்சள் நிற பற்களை மீண்டும் வெள்ளையாக்க உதவுகிறது இந்த பயனுள்ள பதிவு.

இயற்கையான முறையில் மஞ்சள் நிற பற்களை மீண்டும் வெள்ளையாக்க உதவுகிறது இந்த பயனுள்ள பதிவு.

பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி. மற்றவர்கள் முன் பார்க்க அழகாக தெரியவேண்டும் என்பதுதான் அனைவரும் விருப்பமாக இருக்கும். மற்றவர்கள் முன் நமது அழகை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த மஞ்சள் நிற பற்கள்.

இந்த பிரச்சனை நம்மில் பலருக்கு உண்டு. பற்கள் மஞ்சள் நிறமடைவது புகைப்பழக்கம் உள்ளவர்களிடன் மட்டுமன்றி எல்லோரிடமும் பொதுவாக காணப்படும் ஒன்றாகும். அதிகம் புகை பிடித்தல், மது அருந்துதல், காப்பி குடித்தல், மேலும் அதிக சர்க்கரை இதுபோன்றவை நமது பற்களை மஞ்சளாக மாற்ற முக்கிய காரணமாக அமைகின்றது.

இதுபோன்ற மஞ்சள் கறையுடைய பற்களை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இயற்கையான முறையில் எப்படி வெள்ளையாக மாற்றுவது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு பற்களின் மஞ்சள் கறையை நீக்கி வாயில் உள்ள கிருமிகள் , துர்நாற்றத்தையும் அழிக்கும். எனவே பேஸ்டுடன் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறையும் ஊற்றி தேய்த்து பாருங்கள் அல்லது தனியாகவும் எலுமிச்சை சாறை பற்களில் தேய்க்கலாம். 

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணையுடன் சிறிது சமையல் சோடாவை கலந்து பயன் படுத்துவதன் மூலம் இரண்டு நிமிடங்களில் வெள்ளை பற்களை பெற முடியும். முதலில் தேங்காய் எண்ணெய்யையும் சமையல் சேடாவையும் சம அளவாக எடுத்து நன்றாக கலந்து கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.

உங்கள் பற்பசைகளிற்கு பதிலாக இதனைப் பயன்படுத்துவதனால் சிறந்த பலனைப் பெற முடியும்.

ஆப்பில் சிடர் வினிகர் : மஞ்சள் கரையை போக்குவதில் ஆப்பில் சிடர் வினிகர் மிகுந்த பயனளிக்கிறது. ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தி வாயைக் கொப்பளித்து வந்தால் மஞ்சள் கறை நீங்கும். பற்களின் துர்நாற்றம் போகும்.


Advertisement