பெண்களுக்கு எப்போது முதன் முதலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது தெரியுமா? இதோ!

பெண்களுக்கு எப்போது முதன் முதலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது தெரியுமா? இதோ!


When womens got rights to vote in election

மனிதர்களாகிய நமது ஒவொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான அங்கம் "பெண்" பெண் இல்லாமல் இங்கு எந்த மனிதரும் இல்லை. வளர்ந்துவிட்ட இந்த நாகரிக உலகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதிக்கப்படுகின்றனர். ஆனால், பலநூறு வருடங்களுக்கு முன்னர் நமது முன்னோர் பெண்களை அடிமைகளாகவே பார்த்து வந்தனர்.

படிப்பு, வேலைவாய்ப்பு, சமூகத்தில் அங்கம் இப்படி பெண்கள் யாருக்கும் உரிமை வழங்கப்படவில்லை. ஒவொரு நாட்டிலும் மிக முக்கிய உரிமையாக கருதுத்தப்படுவது வாக்குரிமை. ஆனால் இந்த வாக்குரிமைய பெண்கள் பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் பெற்றனர்.

நவீன காலத்தில், பெண்கள் வாக்குரிமை இயக்கம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சு நாட்டில் தொடங்கியது. அந்நாட்டின் முழுமையிலும், கனடாவின் பிரெஞ்சு மொழி புழங்கிய கியூபெக் மாநிலத்திலும் பெண்களுக்கான முழு உரிமை கிடைக்க மேலும் காலம் பிடித்தது. 1860களில் சில பெண்கள் சுவீடன், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடு களின் சில மேற்கு மாநிலங்களில் வாக்களிக்க உரிமை பெற்றனர்.

பிரித்தானிய குடியேற்றப் பகுதியாக இருந்த நியூசிலாந்து, வளர்ந்த எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கிய முதல் நாடாக 1893 இல் சிறப்புற்றது. அருகிலிருந்த ஆசுத்திரேலியா குடியேற்றப் பகுதியில் பெண்கள் 1895 இல் வாக்களிக்க உரிமை பெற்றார்கள்; மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் உரிமை பெற்றார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமை பெண்களுக்கு நியூசிலாந்தில் 1919 இல் தான் வழங்கப்பட்டது.

Womens day

ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு முதன்முதலில் வாக்களிக்கும், தேர்ந்தெடுக்கப்படும் உரிமை வழங்கப்பட்டது பின்லாந்து நாட்டில் ஆகும். அவ்வாறு உரிமை வழங்கப்பட்ட 1907 இல் பின்லாந்து உருசியப் பேரரசில் தனித்தியங்கிய நாட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உறுப்பினராக உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண் தெரிந்தெடுக்கப்பட்டார்.

வாக்குரிமை பெறுவதற்கு, பெண்கள் பல நாடுகளில் போராட வேண்டியிருந்தது. நாடு முழுவதற்கும் பொது வாக்குரிமை வழங்கப்படுவதற்கு முன்னர் இவ்வாறு போராடித்தான் பல நாடுகளில் வாக்குரிமை பெற்றார்கள். 1979இல் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட "பெண்களுக்கு எதிரான அனைத்து வேறுபாட்டு ஒதுக்கல்களையும் ஒழித்தல் பற்றிய அறிக்கை"யின்படி, பெண் வாக்குரிமை ஒரு மனித உரிமையாகும்.