முக அழகை பாதிக்கும் மங்கு என்ற பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது...? தீர்வு என்ன..?!!

முக அழகை பாதிக்கும் மங்கு என்ற பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது...? தீர்வு என்ன..?!!



What causes pigmentation that affects facial beauty..  What is the solution..

பெண்களின் முக அழகை பாதிக்கும் சரும பிரச்சினைகளில் ஒன்று கருந்திட்டு அல்லது மங்கு.

இந்த மங்கு மூக்கின் மேல் பகுதி, கன்னம், நெற்றி, கழுத்தின் பின் பகுதியில் கருப்பு நிறத்தில் காணப்படும் படையாகும். அவரவர் தோலின் நிறத்தைப் பொறுத்து இதன் அடர்த்தி மாறுபடும். 

முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு தான் சருமத்தில் இந்த மங்கு பிரச்சினை ஏற்படும். ஆனால் இப்போது 20 வயதிலேயே பலருக்கு இந்த சரும பிரச்சனை உண்டாகிறது. 

உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்கள்  சரியாக வெளியேறாமல் இருப்பது, ஊட்டச்சத்து குறைபாடு, மேலும் சருமத்தில் படியும் இறந்த செல்களை நீக்காமல் இருப்பது, போன்ற பல காரணங்களால் மங்கு என்ற கருந்திட்டு பிரச்சினை உண்டாகிறது.

குழந்தைப் பேறின்போது அதிக ரத்த இழப்பு உண்டாவது. பால் ஊட்டுவதால் உடலில் சத்து குறைபாடு ஏற்படுவதாலும், குழந்தை பிறந்த பிறகு, தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்களால் இந்த இருந்திட்டு என்ற மங்கு  பிரச்சினை உண்டாகும். 

உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிப்பதால், இந்தப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கலாம். இதற்கு வெளிப்பூச்சு கிரீம்கள் எதுவும் தீர்வு தராது. நாம் உண்ணும் உணவு மூலம் இதை சரிசெய்யலாம். 

மீன், இறால், நண்டு, மீன் எண்ணெய் போன்றவையும், பாதாம், பூசணி விதை, ஆளி விதை, நெல்லிக்காய், வில்வ இலை, திரிபலா சூரணம், கருஞ்சீரகம், சோற்றுக் கற்றாழை ஆகியவையும் இந்த இருந்திட்டை தடுக்கும் ஆற்றல் கொண்டவை. சமச்சீரான உணவு, நல்ல தூக்கம், போதுமான தண்ணீர், உடற்பயிற்சி, நல்ல மனநிலை போன்றவை இந்த பிரச்சினைக்கு தீர்வாகும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த மருந்துகளை சாப்பிட்டு உடலில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றி, தோலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பொறுத்து சிகிச்சை பெற்று இந்த  பிரச்சினையை குணமாக்கலாம்.