குட்மார்னிங் டிப்ஸ்: தேள் கடித்துவிட்டதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!



treatment-for-scorpio-bite-in-tamil

பூச்சி, பூரான், தேள், பாம்பு போன்றவை மனிதர்கள் வாழும் அதே பகுதிகளில்தான் அதிகம் வசிக்கிறது. சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக அவை நம்மை கடிப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அவ்வாறு உங்களை தேள் கடித்துவிட்டால் உடனே நாலைந்து வெங்காயங்களை எடுத்து நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயத்தை இழைத்து அல்லது அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பற்று போட்டு விட்டால் உடனே தேள் கடி இறங்கி விடும்.


வெங்காயத்தை பிழிந்து சாறு எடுத்து அதில் கொஞ்சம் மருதாணி இலையையும் துணி வெளுக்கும் சோப்பு ஒரு துண்டும் சேர்த்து அரைத்து, விழுதாக எடுத்து தேமல் படைமேல் பூசி வந்தாலும் சரியாகிவிடுகிறது.

Health tips in tamil

எவரேனும் திடீரென்று மூர்ச்சையாகி விழுந்து விட்டால் அவசர அவசரமாக ஒரு வெங்காயத்தைக் கொண்டு வந்து, அவரை முகரச் சொல்லுங்கள். உடனே தெளிந்து விடும்.


இரவில் தூக்கம் வரவில்லையே என்று கவலை வேண்டாம். வெங்காய ரசத்துடன் சமஅளவு நீர் கலந்து குடித்துவிட்டுப் படுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும். நிம்மதியாகத் தூங்கலாம்.


உடலில் ரத்தம் உறைவதால் ஏற்படும் கட்டிகளைக் கரைக்கும் தன்மையை வெங்காயம் ரத்தத்தில் பெருக்குகிறது. இதனை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் உதவுங்கள்.