எரியும் 29 கான்க்ரீட் கற்களை 30 நொடிக்குள் உடைத்து கின்னஸ் சாதனை; பாகிஸ்தான் சாதனையை முறியடித்த தமிழன்.!Madurai Youth Did Guinness Record 

 

மதுரை மாவட்டத்தில் உள்ள சின்ன சொக்கிகுளம் பகுதியில் வசித்து வருபவர் விஜய் நாராயணன். இவர் மென்பொருள் பொறியாளர் ஆவார். டெக்வொண்டோ கலையின் மீது ஆர்வம் கொண்ட விஜய், தனது 23 வயதில் இருந்து அதனை கற்றுத்தேர்ந்து இருக்கிறார். 

தொடர்ந்து டெக்வெண்டோ போட்டிகளிலும் கலந்துகொண்டு கின்னஸ் சாதனைகளையும் படித்து வருகிறார். அப்படியாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 32 கின்னஸ் சாதனைகளை செய்து அசத்தியுள்ளார். 

30 வினாடியில் 11 கான்கிரீட் கற்களை ஜம்ப் பேக் கிக் முறையில் கால்களால் உடைத்தது, நிமிடத்தில் 37 கான்கிரீட் கற்களை கால்களால் உடைத்தது, கையில் அதிக எடையுடன் தாக்குவது, ஆணிப்படுகை மீது படுத்து கற்களை உடைப்பது, 1 நிமிடத்தில் 48 கான்கிரீட் கற்களை உடைத்தது என சாதனை படைத்துள்ளார். 

இந்நிலையில், 33 வது கின்னஸ் சாதனை செய்துள்ள விஜய் நாராயணன், 30 வினாடிகளில் 29 முறை எரிந்த கான்கிரீட் கற்களை கையால் உடைத்து சாதனை செய்துள்ளார். முன்னதாக பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த முகமது இம்ரான் 30 வினாடியில் 25 கற்களை உடைத்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்போது விஜய் முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார். அவரின் திறமையை பாராட்டி கின்னஸ் சாதனை சான்றிதழும் வழங்கப்பட்டது.