லைப் ஸ்டைல் டெக்னாலஜி

தொலைபேசியில் ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்? இந்த நிறுவனங்கள் உங்களை கண்காணிக்கிறதாம்!

Summary:

Top companies are watching our browsing history

தொலைபேசி இல்லாத நபர்களே இல்லை என்ற அளவிற்கு இன்று அனைவரிடத்திலும் தொலைபேசி உள்ளது. அதிலும் பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகின்றனர். உடனுக்குடன் பேசவும், தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் தொலைபேசி பயன்பட்டாலும் பல்வேறு கெட்ட விஷயங்களும் தொலைபேசி முக்கிய ஒன்றாக உள்ளது.

அதில் ஒன்றுதான் ஆபாச படம் பார்ப்பது. சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இன்று ஆபாச படங்களை நொடி பொழுதில் பார்க்கும் அளவிற்கு தொலைபேசியும், அதிவேக இணையமும் வழிவகுக்கிறது.

இந்நிலையில் நாம் ஆபாச வீடியோ பார்ப்பது யாருக்குமே தெரியாது என்று நினைத்துக்கொண்டிருக்கும் அனைவர்க்கும் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நீங்கள் பார்க்கும் அணைத்து ஆபாச இணையதளங்களையும் பேஸ்புக், கூகிள், ஆரக்கல் போன்ற நிறுவனங்கள் கண்காணிக்கின்றதாம்.

எடுத்துக்காட்டாக, பேஸ்புக் அக்கவுண்டினை மொபைலில் லாகின் செய்துவிட்டு நீங்கள் மற்ற வலைதளங்களில் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை தான் அவர்கள் கண்காணிக்கிறார்கள்.

இதுகுறித்து அந்த நிறுவனங்களிடம் கேட்டபோது மார்க்கெட்டிங் செய்வதற்காக நாங்கள் இந்த தகவல்களை சேமிக்கவில்லை என்றும், பயனர்கள் பார்க்கும் தளங்கள் எங்கள் பக்கங்களில் பகிர்ந்துவிடாமல் இருப்பதற்காகவும், அது சம்மந்தமான விளம்பரங்களை தவிர்க்கவும் இந்த தகவல்களை சேமிப்பதாக கூறியுள்ளது.


Advertisement