லைப் ஸ்டைல்

ஏறிய வேகத்தில் குறைந்து வரும் தங்கத்தின் விலை..இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Summary:

Today's gold rate in chennai

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகமானதை அடுத்து பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய துவங்கினர். இதனால் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவு உயர்ந்து கொண்டே சென்றது.

இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலையானது படிபடியாக குறைந்து கொண்டே வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 384 ரூபாய் குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,916 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,964 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது.அதேபோல, நேற்று 39,712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 384 ரூபாய் குறைந்து 39,328 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.5,212லிருந்து இன்று ரூ.5,164 ஆகக் குறைந்துள்ளது.8 கிராம் தூய தங்கம் நேற்று 41,696 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 384 ரூபாய் குறைந்து 41,312 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


Advertisement