13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
கமகம வாசனையில் கார்த்திகை தீபம் ஸ்பெஷல் கொழுக்கட்டை.!
தெரளி கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை பற்றி தெரியுமா? அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள். இந்த கார்த்திகை தீப திருவிழாவில் சுவையான, புதுவிதமான இந்த கொழுக்கட்டையை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
தெரளி இலை - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் -2 கப்
பச்சரிசி - 3 கப்
செய்முறை :
2 மணி நேரம் பச்சரிசியை தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி எடுத்து மிக்ஸியில் பச்சரிசியை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்பு அரைத்த பச்சரிசி மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும்.
பின்னர் அதை எடுத்து தனியாக வைத்துக்கொண்டு, அடுத்தபடியாக வெல்லத்தை எடுத்து 1/4 கப்தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும். இப்போது அடுப்பில் வைத்து வெல்லத்தை கரைக்க வேண்டும். அதன் பிறகு நன்றாக பாகு காய்ச்சி கொள்ளவும். பின்னர் வெல்லப்பாகை வடிகட்டி தனியே எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தபடியாக கடாயை அடுப்பில் வைத்து, பாசிப்பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும். பின்னர் அதை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, பின்னர் அதே கடாயில் 1 கப் துருவிய தேங்காயை போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தெரளி கொழுக்கட்டை செய்யும் சமயத்தில் இதன் மூலமாக சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும். தெரளி இலை கிடைக்கவில்லையென்றால், பனையிலை இல்லையென்றால், பலாமர இலையிலும் இதனை செய்யலாம். தென்னை ஓலையை எடுத்து ஓலைகளை எடுத்து குச்சிகளை மட்டும் வைக்கவும். குச்சிகளை மட்டும் தனியாக வைத்து விடவும் குச்சிகளை உடைத்து எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவை எடுத்து அதில் வறுத்த பாசிப்பருப்பு, ஏலக்காய், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொள்ளவும். அடுத்தபடியாக வெல்ல பாகை சிறிது, சிறிதாக சேர்த்து கலக்கி கொள்ளவும். இப்போது நன்றாக பிசைந்து எடுத்து இதனை கையில் மாவு பிடித்து தெரளி இலையில் வைத்து தேவையான வடிவத்தில் மடித்து எடுத்துக் கொள்ளலாம்.
பின்னர் அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி தண்ணீரில் குச்சி இலைகள் ஆகியவற்றை சேர்த்து தட்டின் மேல் மறுபடியும் இலைகளை வைக்கவும் இப்படி செய்தால், கொழுக்கட்டை வாசனையாக இருக்கும். தற்போது கொழுக்கட்டைகளை அதன் மேல் அடுக்கி வைத்து, மூடி வைக்க வேண்டும். பின்னர் வேக வைத்து, 20 நிமிடம் சென்ற பிறகு எடுத்தால், சுவையான கார்த்திகை தீபம் ஸ்பெஷல் கொழுக்கட்டை தயாராகிவிடும்.