டீ.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுபவரா நீங்கள்?: அப்படின்னா முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க..!

டீ.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுபவரா நீங்கள்?: அப்படின்னா முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க..!


the-amount-of-food-is-not-known-when-eating-while-watch

நாம் உண்னும் உணவின் சுவை மற்றும் அதன் நறுமணத்தை நுகராமல் டீ.வி திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக உண்ணும் போது உணவின் அளவு தெரியாது. வழக்கத்தை விட கூடுதலாக உண்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு அதிகமாகிவிட்டது என்று  மூளை சிக்னல் செய்யும். கவனம் முழுவதும் டீ.வி திரையில் பதிந்திருப்பதால் மூளை அனுப்பும் சிக்னலை உணராமல் அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்ள நேரிடலாம். நன்றாக மென்று உண்ணாமல் அவசரகதியில் முழுங்கி வைப்பீர்கள். அப்படி உண்பது  வயிற்று உபாதைகள், செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

டீ.வி. பார்த்துக்கொண்டே அளவுக்கு அதிகமாக உண்பதால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். நீங்கள் எவ்வளவு உணவை உட்கொண்டீர்கள் என்பதை மூளை பதிவு செய்யாது. டீ.வி. பார்த்துக்கொண்டே இனிப்பு வகைகளை உட்கொள்வது ருசியாக இருப்பது போல் தோன்றும். அதனால் இனிப்பு பொருட்கள் மீது நாட்டம் அதிகரித்துவிடும். எளிதாக உடல் எடையை அதிகரிக்க செய்துவிடக் கூடும்.

உணவுகளை நன்றாக மென்று உண்ணும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அந்த உணவு எத்தகைய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் சுவை மற்றும் நறுமணத்தை நுகர வேண்டும். நீங்கள் வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்கள் என்ற சிக்னல் மூளைக்கு செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

அதற்கேற்ப உணவை நன்றாக மென்று மெதுவாக உண்ணும்போது, உணவின் அளவு குறித்த சிக்னல் மூளைக்கு செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்கும். அதிகமாக உட்கொள்வதையும் தடுத்துவிடும். என்ன உட்கொள்கிறீர்கள் என்பதை விட அதை எப்படி உட்கொள்கிறீர்கள் என்பது முக்கியமானது.