"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
சிறுநீரகக் கற்களை கரைக்கும் அற்புதமான இளநீர் சூப்... வீட்டிலியே 5 நிமிடத்தில் செய்து அசத்துங்கள்.!
சிறுநீரக கற்களை கரைக்கும் இளநீர் சூப் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து தற்போது காண்போம்.
இளநீரில் அதிகமாக பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளன. இருப்பினும் இளநீரை விட வழுக்கையில் தான் மற்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இதனை உண்பதன் மூலம் சிறுநீரகக் கல் பிரச்சினை வராமல் தடுக்க இயலும்.
தேவையான பொருட்கள் :
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப
காய்ச்சிய பால் - 2 டேபிள் ஸ்பூன்
பீன்ஸ் - 2
கேரட் - 1
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்செய்முறை :
★முதலில் கேரட்டை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பீன்ஸையும் பொடி பொடியாக நறுக்க வேண்டும்.
★தொடர்ந்து வழுக்கை உள்ள ஒரு இளநீரை வாங்கி, அதில் வழுக்கையை கால் கப் இளநீருடன் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும்.
★பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பீன்ஸ், கேரட்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
★அடுத்து காய்கறிகள் நன்கு வதங்கியதும், அதில் அரைத்த இளநீர் வழுக்கை விழுதை சேர்த்து உப்பு, மிளகுத்தூள் மற்றும் மீதியுள்ள இளநீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
★இவை அனைத்தும் நன்றாக கொதித்ததும், பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் சுவையான இளநீர் சூப் தயாராகிவிடும்.