ஜாக்கிரதை!! நம் உடலில் இங்கெல்லாம் வலி இருந்தால் அது கொலஸ்ட்ரால் அறிகுறியாக இருக்கலாமா.?

ஜாக்கிரதை!! நம் உடலில் இங்கெல்லாம் வலி இருந்தால் அது கொலஸ்ட்ரால் அறிகுறியாக இருக்கலாமா.?



Symptoms for Cholesterol

கொலஸ்ட்ரால் என்பது உயிரணு  மென்ஜவ்வுகளில் காணப்படும் மெழுகுத்தன்மை உள்ள "ஸ்டெராய்டு" எனப்படும் ஒருவகை கொழுப்பு பொருள் ஆகும். நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் பல்வேறு உடல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதிலும் சில சமயம் மரணம் ஏற்படுதற்கும் வாய்ப்புண்டு.

நம் உடலில் தமனிகளில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் சீரான ரத்த ஓட்டம் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். இதன் காரணமாகவே உலகில் அநேகப்பேர் உயிரிழக்க நேரிடுகிறது. நம் உடலில் ஏற்படும் அறிகுறிகளைக் கொண்டு கொலஸ்ட்ரால் அதிகரிப்பை கண்டுபிடிக்கலாம்.

Cholesterol

அவையாவன கொழுப்பின் அளவு நம் ரத்த தமனிகளில் அதிகரிக்கும் போது இரத்த ஓட்டம் குறைந்து இதயத்தில் வலி உண்டாகி மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு பாதங்களில் வலி உண்டாவதோடு மட்டுமல்லாமல் தோலின் நிறம் மாறும். மேலும் கால்களில் உடலின் வெப்பநிலை குறைந்து கால்கள் குளிர்ச்சியாகவும், வலையுடனும் காணப்படும்.

இந்த கொலஸ்ட்ராலை தவிர்க்க அதிகப்படியான எண்ணெய் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இதனைத் தொடர்ந்து யோகா,உடற்பயிற்சி போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய செயல்களை செய்து வந்தால் இந்த கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.