இந்த தோல் பூஞ்சை நோயை குணப்படுத்த முடியுமா?? மற்றவர்களுக்கும் பரவுமா?? முக்கிய தகவல்..

இந்த தோல் பூஞ்சை நோயை குணப்படுத்த முடியுமா?? மற்றவர்களுக்கும் பரவுமா?? முக்கிய தகவல்..


Skin fungus symptoms and treatment

இந்தியாவிலையே முதல் முறையாக கொரோனா நோயாளி ஒருவருக்கு தோல் பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

ஏற்கனவே கருப்பு, வெள்ளை, மஞ்சள் என வித விதமாக பூஞ்சை நோய்கள் மக்களை தாக்கிவரும்நிலையில் தற்போது கர்நாடகாவை சேர்ந்த 50 வயது கொரோனா நோயாளி ஒருவருக்கு தோல் பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகம் மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தை சேர்ந்த 50 வயது நபர்  ஒருவர் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா நோய் தொற்று குணமாகிவந்தநிலையில் அவருக்கு காது பகுதியில் பூஞ்சை நோய் உருவாகி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

Skin fungus

இதுகுறித்து மருத்துவர்கள் அவரை சோதனை செய்ததில் அவருக்கு தோல் பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. ஏற்கனவே கருப்பு, வெள்ளை, மஞ்சள் என வித விதமாக பூஞ்சை நோய்கள் தாங்கிவரும் நிலையில் தற்போது தோல் பூஞ்சை நோய் ஏற்பட்டிருப்பது மக்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோல் பூஞ்சை நோய்யை குணப்படுத்த முடியுமா?

அறுவை சிகிச்சை மூலம் இதனை சரி செய்துவிடலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மற்றவர்களுக்கு பரவுமா?

இந்த தோல் பூஞ்சை நோயானது  ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது எனவும், இதனால் மக்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.