அரிசி உணவு கட்டாயம் சாப்பிட வேண்டுமாம்: காரணம் தெரியுமா?..!

அரிசி உணவு கட்டாயம் சாப்பிட வேண்டுமாம்: காரணம் தெரியுமா?..!



rice-food-eating

 

தென்னிந்திய உணவுகளில் பிரதானமாக இருப்பது அரிசி சாதம். தினமும் 3 வேளை முதல் குறைந்தது ஒரு வேளை மட்டும் என அரிசி சாதம் சாப்பிடுவோர் இங்கு ஏராளம். அரிசி சாதம் பசியை போக்கி வயிறை நிரப்பும். இது உடல் எடையை அதிகரிக்கும் என சிலர் நம்புகின்றனர். 

ஆனால், அரிசி சாதம் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒன்று என மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா தெரிவிக்கிறார். இன்றளவில் பலரும் டயட் இருந்துகொண்டு, அரிசி சாதத்தை தவிர்த்து, பிற உணவுகளை ஊட்டச்சத்துக்களாக எடுத்துக்கொள்கின்றனர். 

இரவு நேரத்தில் அரிசி, பருப்பு போன்றவற்றை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கும் வல்லுநர்கள், அரிசி பீரிபயாட்டிக் பண்புகள் கொண்ட உணவு என்பதால், உடலுக்குள் இருக்கும் பல நுண்ணுயிருக்கும் உணவளிக்கிறது. 

பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை சாப்பிடாமல், கைக்குத்தல் அரிசியை சாப்பிடலாம். கைக்குத்தல் அரிசியில் கஞ்சி முதல் இனிப்பு வரை செய்து சாப்பிடலாம். பருப்பு வகை, தயிர், ணெய், இறைச்சி போன்றவற்றை அரிசி சாதத்தோடு சாப்பிடும்போது சரியான அளவில் சாப்பிட வேண்டும். 

இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு என்பது சீராக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையோடு செயல்படுவது நல்லது. இரவு நேரத்தில் எளிதில் செரிமாணமடையும் இலகு உணவுகளை சாப்பிட வேண்டும். இதனை இட்டிலி, தோசை என அரிசி சார்ந்த உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். 

இவை சீரான உறக்கத்திற்கு வழிவகை செய்யும். ஹார்மோன் சமநிலைக்கு உதவும். இளம் வயதினருக்கு நல்லது. அதேபோல, சருமத்திற்கு நல்லது. உரோம வளர்ச்சியையும் மேம்படுத்தும்.