உடலுக்கு பல நன்மைகளை தரும் சூப்பரான, சுவையான சிவப்பு அவல் லட்டு செய்வது எப்படி.?

உடலுக்கு பல நன்மைகளை தரும் சூப்பரான, சுவையான சிவப்பு அவல் லட்டு செய்வது எப்படி.?


Red aval ladu recipe in Tamil

பட்டை தீட்டப்படாத சிவப்பு அரிசியில் தயாரிக்கப்படும் அவலை சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவி செய்யும். மேலும் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு உதவி செய்யும். அதுமட்டுமின்றி மூளைச் செல்களைப் புத்துணர்ச்சியாக்க வைத்துக் கொள்ள உதவுவதுடன் புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களைக் குடலுக்குள் செல்லவிடாமல் தடுத்து விடும்.

இப்படியான பல நன்மைகளை தரும் சிவப்பு அவலை வைத்து சூப்பரான சுவையான லட்டு செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் - 1 கப்
வெல்லம் ஒரு - 1 கப்
தேங்காய் - 1 கப்
முந்திரி - 10
நெய் - 3 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்Red aval ladu

 

முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி மற்றும் தேங்காயை வறுத்து எடுத்து கொள்ளவும். அதே வாணலியில் அவலையும் வறுத்து எடுத்து கொள்ளவும். வறுத்தெடுத்த அவலை ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அரைத்த அவலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடுங்கள்.

பின்னர் ஒரு வாணலியில் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். பாகு கம்பி பதம் வந்ததும் அதில் வறுத்த முந்திரி, தேங்காய், அரைத்து ஊற வைத்த அவல் சேர்த்து மிதமான தீயில் ஒரு 2 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுப்பை அணைத்து விட்டு ஒரு 10 நிமிடம் கழித்து லட்டாக உருட்டி எடுத்தால் சுவையான, சூப்பரான சிவப்பு அவல் லட்டு தயார்.