"வித்தியாசமான வெற்றிலையில் லட்டு சாப்பிட்டு இருக்கீங்களா?!"

"வித்தியாசமான வெற்றிலையில் லட்டு சாப்பிட்டு இருக்கீங்களா?!"



Recipe for betel laddus

வெற்றிலையைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. எந்த விசேஷத்திலும் விருந்துக்கு பின்னர் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி, பாக்கு சேர்த்து வாயில் போட்டு உமிழ்நீர் சுரக்க மெல்லும் பழக்கம் நம் எல்லோருக்குமே பெரும்பாலும் இருக்கும்.

laddu

மேலும் இந்த வெற்றிலையை ஒற்றைத் தலைவலி மற்றும் நெஞ்சுச்சளிக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்பதும் நாம் அறிந்ததே. ஆனால் இந்த வெற்றிலையில் இனிப்பும் செய்யலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? வெற்றிலையில் லட்டு செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

மூன்று வெற்றிலையை சுத்தம் செய்து இரண்டாக கிழித்து மிக்சியில் போட்டு, அதனுடன் 50கிராம் மில்க்மெய்டு  சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கி, அதில் நெய் சேர்த்து பின்னர் தேங்காய்த் துருவலைப் போட்டு வதக்க வேண்டும்.

laddu

பின்னர் அதில் வெற்றிலைக் கலவையை சேர்த்து நன்கு ஒட்டாமல் வரும்வரை கிளற வேண்டும். அதன் பின்னர் இதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி, உருண்டைகளாகப் பிடித்து அதன் நடுவில் குல்கந்து, டூட்டி ப்ரூட்டி வைத்து, பின்னர் தேங்காய்த் துருவலில் புரட்டினால் சுவையான வெற்றிலை லட்டு தயார்.