சத்தான, ஸ்வீட்டான ராகி பர்பி.. அசத்தலாக இப்படி செய்து பாருங்கள்.!

சத்தான, ஸ்வீட்டான ராகி பர்பி.. அசத்தலாக இப்படி செய்து பாருங்கள்.!



ragi-barfi-recipe

சுவை மிக்க ஆரோக்கியமான ராகி பர்பி செய்வது குறித்து தற்போது நாம்  தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Lif Style

தேவையான பொருட்கள் :

ஏலக்காய் தூள் - சிறிதளவு

முந்திரி - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

வெல்லம் - 1 கப்

ரவை - 1/4 கப்

ராகி மாவு - 1 கப்

செய்முறை :

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் சிறிதளவு நெய்விட்டு, ராகி மாவு சேர்த்து, மிதமான வெப்பத்தில் வறுக்க வேண்டும். அதன் பிறகு அதில் ரவையை சேர்த்து வறுக்க வேண்டும். இன்னொரு பாத்திரத்தை எடுத்து, அதில் ஒரு கப் வெல்லத்தை போட்டு, கரைத்து, வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Lif Style

அதன்பிறகு வடிகட்டிய வெல்லக் கரைசலை ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ராகி மற்றும் ரவை ஆகியவற்றோடு சேர்த்து, கலக்கி கொள்ளவும். பின்பு ஏலக்காய் தூள் சேர்த்து குறைவான வெப்பத்தில் நன்றாக கலக்கி இறக்கி வைக்கவும். பின்னர் அதனை தட்டில் கொட்டி, சற்று நேரம் ஆறவிட்டு சதுர வடிவில் நறுக்கி கொள்ள வேண்டும். கடைசியாக முந்திரியை சேர்த்து பரிமாறினால் சுவையான ராகி பர்பி தயாராகிவிடும்.