லைப் ஸ்டைல்

லெக்கின்ஸ் அணியும் பெண்களிடம் கவனிக்கவேண்டிய சில முக்கியமான விஷயங்கள்!

Summary:

Problems of wearing leggings girls must aware

மனிதன் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த விஷயங்களை சில மாற்றங்களை செய்து பேஷன் என்ற பெயரில் பயன் படுத்துகின்றான். அதில் ஒன்றுதான் தற்போது பெண்கள் அணியும் லெகின்ஸ்.

முகலாயர் காலத்தில் பெண்கள் அணிந்த ஒருவிதமான உடைதான் இந்த லெக்கின்ஸ். அந்த உடையில் சில மாற்றங்களை செய்து இன்றைய கால பெண்கள் பேஷன் என்ற பெயரில் பயன்படுத்தி வருகின்றனர்.

லைக்ரா, வெல்வெட், லேஸ் மற்றும் டெனிம் துணிகளை கொண்டுதான் இந்த லெக்கின்ஸ் தயாரிக்கப்படுகிறது  இதில் அதிகமாக பெண்கள் அணிவது லைக்ரா வகையை சேர்ந்த லெக்கிங்ஸ்கள்தான். இது உடலோடு ஒட்டி உறவாடுவதால், பெண்கள் இதை சவுகரியமாக கருதுகிறார்கள். 

ஆனால், இது மெல்லியதாக இருப்பதால் பெண்களின் உடல் அங்கங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதை அவர்கள் கவனிக்க மறந்து விடுகிறார்கள்.
லெக்கிங்ஸில் பல வகைகள் உண்டு. முக்கால் லெக்கிங்ஸ், மணிகளால் அலங்கரிக்கப்பட்ட, கால் பாதங்களில் கொசுவம் போல் மடிக்கப்பட்ட லெக்கின்ஸ் என பல டிசைன்களில் வருகிறது.

பொதுவாக ஒருவரை மிகவும் அழகாக காட்டுவது அவர்கள் அணியும் உடைதான். குறிப்பாக பெண்களை அழகாக காட்டுவது அவர்கள் அணியும் உடைக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பெண்கள் தாங்கள் அணியும் உடையை தேர்வு செய்யும்போது அவர்களது உடல் எடை, உயரம் போன்றவற்றை கருத்தில் கொண்டுதான் தேர்வு செய்யவேண்டும்.

பொதுவாக குண்டாக இருப்பவர்கள் லெக்கின்ஸ் அணியும் போது அவர்களின் இடுப்பளவுக்கு ஏற்ப பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.அதே போல், லெக்கிங்ஸ் உடலோடு ஒட்டிக்கொண்டு இருப்பதால் அதற்கு அணியும் டாப்ஸ் முட்டிக்கு மேல் & இடுப்புக்கு கீழ் இருக்க வேண்டும். உடலை இறுக்கி பிடிக்கும் டீஷர்ட் அணியக்கூடாது. 


Advertisement