
Problems for brotta
தற்போது குழந்தை முதல் முதியவர்கள் வரை மிகவும் பிடித்த உணவாக பரோட்டா இருக்கின்றது. ஆனால் பரோட்டா சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை.
ஆம்.. பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துவங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயல் பெராக்ஸைடு என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாகுகிறார்கள். அவ்வாறு தயாரித்த மாவுதான் மைதா.
பென்சாயல் பெராக்ஸைடு நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம் ஆகும். இந்த ராசாயனம் மாவில் உள்ள புரோட்டினுடன் சேர்ந்து நீரழிவு நோய் ஏற்பட காரணமாக உள்ளது.
மேலும் மைதாவில் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinomotto போன்ற உபபொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது.
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல. மைதாவில் நார்சத்து கிடையாது, நார்சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும். இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த தின்பண்டங்களை உண்ணாமல் தவிர்ப்பது நல்லது.
ஐரோப்பா, லண்டன், சீனா போன்ற நாடுகளில் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.
Advertisement
Advertisement