வயிற்றுப்புண்ணால் அவதிப்படுறீங்களா?.. இந்த ஒரு சூப் போதும்.. ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி..!

வயிற்றுப்புண்ணால் அவதிப்படுறீங்களா?.. இந்த ஒரு சூப் போதும்.. ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி..!


Poosanikai Soup Will Cure Stomach ulcer 

இன்றளவில் நாம் மாறிவரும் உணவு மற்றும் கலாச்சார பிரச்சனை காரணமாக பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்தித்து வருகிறோம். இதில் அதிக கவனம் எடுக்க வேண்டிய நிலையில் இளம் தலைமுறை இருக்கிறது. 

இவர்கள் பெரும்பாலும் வயிற்றுப்புண் காரணமாக அவதிப்பட்டு வருகிட்ணர்னர். இவர்கள் பெரும்பாலும் சாப்பிடும் அதிக காரம் மற்றும் வினிகர் போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்ட துரித உணவுகள் வயிற்றுப்புண்ணை அபரீதமாக அதிகரிக்கும். 

இவ்வாறாக பல காரணிகளால் உருவான வயிற்றுப்புண்ணை சரி செய்ய பூசணிக்காய் சூப் நல்லது. இன்று பூசணி சூப் செய்வது குறைந்து தெரிந்துகொள்ளலாம். 

பூசணிக்காய் சூப் செய்ய தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் துண்டு - ஒரு கிண்ணம்,
வெண்ணெய் - ஒரு கரண்டி,
கொத்தமல்லி தழைகள் - சிறிதளவு,
பால் - ஒரு டம்ப்ளர், 
மிளகு & சீரகத்தூள் - ஒரு கரண்டி, 
பூண்டு - 2 பற்கள், 
சின்ன வெங்காயம் - 4,
உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:  
முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின் கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடாக்கி, நறுக்கியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

இவை நன்கு வதங்கியதும் பூசணிக்காய் துண்டு, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின் 4 டம்ப்ளர் தண்ணீர் விட்டு வேகவைக்க வேண்டும். பூசணிக்காய் வெந்ததும், அந்நீரை வடித்துவிட்டு பூசணிக்காயை ஆறியபின் மிக்சியில் சேர்த்து அரைக்க வேண்டும். 

அரைத்த பூசணியை எடுத்து வைத்த நீரில் சேர்ந்து கலந்து, அதனுடன் பால், மிளகு, சீரகத்தூள் ஆகியவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறினால் சுவையான, வயிற்றுப்புண்ணை சரிசெய்யும் பூசணிக்காய் சூப் தயார். 

இதனால் வயிற்றுப்புண் மட்டுமல்லாது சிறுநீரக பிரச்சனை, சிறுநீரக கல் பிரச்சனை, உடற்பருமன், கொழுப்புகள் சார்ந்த பிரச்சனை குறையும். வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் உடையோர் 15 நாட்கள் தொடர்ந்து பூசணி சூப் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.