ஓ... இதற்கு தானா அந்த ஓட்டை! பிளாஸ்டிக் நாற்காலியில் ஓட்டை இருப்பது ஏன் தெரியுமா? இனி தெரிஞ்சுக்கோங்க...
நம் வீடுகளில் பொதுவாக விலை உயர்ந்த நாற்காலிகள் இல்லாவிட்டாலும், குறைந்தது ஒரு பிளாஸ்டிக் நாற்காலி இருக்காமல் இருப்பது அரிது. பெரும்பாலும் இதை உட்கார்வதற்கும் அல்லது ஆடைகளை வைக்கவும் பயன்படுத்துகிறோம். ஆனால், இந்நாற்காலியின் பின்புறத்தில் உள்ள துளைகள் பற்றி பலருக்கும் சரியான தகவல் தெரியாமல் அலங்காரமாகவே நினைத்து வந்துள்ளனர்.
நாற்காலிகளில் துளைகள் வைப்பதன் காரணங்கள்
பிளாஸ்டிக் நாற்காலிகளில் துளைகள் வைப்பதற்குப் பல முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்:
1. காற்று செல்லும் வசதி
பிளாஸ்டிக் நாற்காலிகள் வீடுகள், பள்ளிகள், கூட்டங்கள் என பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கும்போது காற்று சுழற்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக துளைகள் வைக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: பிளாட்டினம் vs தங்கம் எது முதலீட்டுக்கு சிறந்தது தெரியுமா? அவசியம் பார்த்து பயன்பெறுங்கள்...
2. எளிதில் தூக்கும் வசதி
நாற்காலிகளை அடுக்கியபின் அவசரத்திற்கு அவற்றை எளிதில் எடுத்துச் செல்ல துளைகளில் விரலை வைத்து தூக்குவதற்கு வசதியாக இருக்கும்.
3. உற்பத்தி செயல்முறை
நாற்காலிகள் சூடான நிலையில் தயாரிக்கப்படுவதால், அந்த சூட்டை குறைத்து அச்சில் ஒட்டாமல் இருக்க துளைகள் உதவுகின்றன.
4. எளிதான இயக்கம் மற்றும் நீடித்த பயன்
துளைகள் இருப்பதால் நாற்காலிகளை எளிதாக நகர்த்த முடியும். இதனால் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் வலிமையும் அதிகரிக்கிறது.
5. உற்பத்தி செலவு குறைவு
துளைகள் வைக்கப்படுவதால் பிளாஸ்டிக் குறைவாக பயன்படுகிறது. இது உற்பத்தியாளருக்கு லாபமாகும். ஆயிரக்கணக்கில் தயாரிக்கும் போது கோடிக்கணக்கில் சேமிப்பு கிடைக்கும்.
இவ்வாறு ஒரு சாதாரண நாற்காலி வடிவமைப்பு கூட பல காரணங்களுக்காக சிந்தித்து செய்யப்படுவதை அறிந்தால், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் முக்கியத்துவம் எவ்வளவு அதிகம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பிளாட்டினம் vs தங்கம் எது முதலீட்டுக்கு சிறந்தது தெரியுமா? அவசியம் பார்த்து இனி உஷாரா எடுங்க....