பாக்கெட் பாலை அதிக வெப்பநிலையில் காய்ச்சி குடிப்பது ஆபத்து! நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!
நாம் வீட்டில் தினமும் காய்ச்சி குடிக்கும் பாக்கெட் பாலைப் பற்றி புதிய ஆய்வுத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நவீன பாஸ்டுரைஸ் முறையில் தயாராகும் பால், உண்மையில் மீண்டும் மீண்டும் காய்ச்சப்பட வேண்டியதில்லை என்பதையே நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். பாஸ்டுரைஸ், உடல்நல அபாயம், செரிமான சிக்கல் என்பவை இதில் முக்கியமான செய்திகள்.நாம் தினசரி வாங்கும் பாக்கெட் பால், உற்பத்தியாளர்களால் பாஸ்டுரைஸ் முறையில் வெப்பமூட்டப்பட்டு பாத்திரங்களில் அடைத்து வழங்கப்படுகிறது.
இந்த செயல்முறையில், தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதுடன், பால் பாதுகாப்பாக நம்மிடம் வர வாய்ப்பு உருவாகிறது. ஆனால் இதற்கு பிறகும் அந்தப் பாலை மீண்டும் அதிகமாக வெப்பப்படுத்தினால் அதில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் – குறிப்பாக வைட்டமின் பி மற்றும் சி – அழிந்து போகும் அபாயம் உள்ளது.சிலர் பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க விடுகிறார்கள். இது நல்ல பழக்கமல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பல்வேறு ஆய்வுகளின்படி, பாஸ்டுரைஸ் செய்யப்பட்ட பாலை ஒரு முறைக்கு மேல் காய்ச்சி குடிப்பது அவசியமில்லை.
ஏனெனில் இது பால் உள்ளமைவிலும் மாற்றம் ஏற்படுத்துகிறது. இதில் உள்ள புரதங்கள் செரிமானம் ஆகாமல், வயிற்று உள்பட உள் உறுப்புகளில் சிக்கல்களை ஏற்படுத்தும்.மேலும், பாஸ்டுரைஸ் பாலில் இயல்பாகவே கால்சியம் அளவு குறைந்திருப்பதால், அதை மீண்டும் கொதிக்க விடுவதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. லாக்டோஸ் அலர்ஜி, பால் புரத அலர்ஜி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பாக்கெட் பாலை தவிர்க்க வேண்டும் என்பதே நிபுணர்களின் பரிந்துரை.
இதையும் படிங்க: நீங்கள் குடிக்கும் பாலில் இரசாயனம் கலந்துள்ளதா என்பதை வீட்டிலேயே கண்டுபிடிக்கலாம்! எப்படினு இனி தெரிஞ்சுக்கோங்க...
பால் என்பது ஒரு முக்கிய ஊட்டச்சத்து உணவாக இருந்தாலும், அதைப் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான சரியான முறைகள் இருக்கின்றன. பாஸ்டுரைஸ் செய்யப்பட்ட பாலை அளவுக்கு மீறி காய்ச்சாமல், குறைந்த வெப்பத்தில் சுடச்சுட பருகுவது உடல்நலத்திற்கு நல்லது என்பதை உணர்வோம்.
இதையும் படிங்க: நீங்கள் குடிக்கும் பாலில் இரசாயனம் கலந்துள்ளதா என்பதை வீட்டிலேயே கண்டுபிடிக்கலாம்! எப்படினு இனி தெரிஞ்சுக்கோங்க...