ஓணம் ஸ்பெஷல் கேரளா ஸ்டைல் அவியல் செய்வது எப்படி...

ஓணம் ஸ்பெஷல் கேரளா ஸ்டைல் அவியல் செய்வது எப்படி...


Onam special aviyal recipe in Tamil

ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளா ஸ்டைல் அவியல் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

சௌசௌ - 150 கிராம்

உருளைக்கிழங்கு - 150 கிராம்

 கேரட் - 150 கிராம் 
பூசணிக்காய் - 150 கிராம்

வாழைக்காய் - 150 கிராம்

வெங்காயம் - 150 கிராம்

தேங்காய் - 1/2 கப் 

பச்சை மிளகாய் - 4 
தயிர் - 1/2 கப் 
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது 
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு.

முதலில் காய்கறிகள் மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

onam special

அதன் பின் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் வெட்டிய காய்கறிகளை சேர்த்து காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் விட்டு, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து காய்கறியில் உள்ள தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும்.

அதன்பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் சிறிது உப்பை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் அதில் தயிரை ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கி விடவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த, பின் வெங்காயம் சேர்த்து, அதனை பொன்னிறமாக வதக்கி, அத்துடன் அந்த காய்கறி கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு, கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடவும். சுவையான கேரளா ஸ்டைல் அவியல் தயார்.