டியர் லேடிஸ்.. ஹேண்ட் பேக் வாங்க போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கிட்டு போங்க.!



notice-this-7-points-while-buying-handbag

ஹேண்ட் பேக்கிங் அவசியம் :
நிறைய பெண்கள் ஹேண்ட் பேக்கை தனக்கு ஒரு முக்கியமான பொருளாக கருதுகின்றனர். தனக்கு தேவையான 98 சதவீதம் பொருட்களை அந்த பேக்கில் வைத்து தான் கொண்டு செல்கின்றனர். சார்ஜர், மொபைல் போன், பணம், வாட்டர் பாட்டில், மேக்கப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் என்று அனைத்தையும் இந்த பேக்கில் தான் வைத்துக்கொண்டு அவர்கள் செல்கின்றனர். ஆனால், ஹேண்ட் பேக் வாங்கும்போது சில முக்கிய குறிப்புகளை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தெரியுமா.? அவை என்னவென்று பார்க்கலாம் வாங்க. 

Handbag

அளவு மற்றும் தரம் :
நாம் வாங்குகின்ற ஹேண்ட்பேக் தேவையான அளவு எடை மற்றும் அளவில் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். டிசைன் நன்றாக இருக்கிறது என்று பெரிய பேரை வாங்கிவிட்டு பின் அதை பயன்படுத்த முடியாமல் பலரும் வைத்திருப்பார்கள். ஹேண்ட் பேக் விலை குறைவாக இருக்கிறது என்று சரியில்லாத ஜிப் அல்லது மிகவும் தரம் குறைந்த ஜிப், துணி கொண்ட பேகை வாங்கினால் அது விரைவில் கிழிந்து விடும். விலை உயர்ந்த பொருட்கள் பணம் உள்ளிட்டவற்றை அதில் நாம் எடுத்து செல்வோம். அப்போது பேக் தவறுதலாக கிழிந்தாலோ அல்லது ஜிப் சரியாக இல்லை என்றாலோ நாம் எடுத்துச் செல்லும் பொருட்களை இழக்கும் நிலை ஏற்படலாம். எனவே, ஹேண்ட் பேக் வாங்கும்பொழுது விலையை பார்க்காமல் தரமானதாக வாங்க வேண்டும். 

குட்டி பேக்குகள் மீதான திடீர் ஈர்ப்பு :
சிறியதாக இருக்கும் ஹேண்ட் பேக்குகள் பலருக்கும் கவர்ச்சியாக இருக்கும். குட்டி குட்டி ஹேண்ட் பேக்குகளை பார்த்தவுடன் ஆர்வத்தில் அதை பலரும் வாங்கிவிட்டு, பின் அதில் நிறைய பொருட்களை எடுத்துக் கொண்டு செல்ல முடியவில்லை என்று அதை பெரிய ஹேண்ட்பேக் உள்ளே போட்டு செல்லும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது. எனவே, ஆர்வத்தில் ஹேண்ட் பேக் வாங்காமல் அதன் பயன்பாட்டை நினைத்து பார்த்து வாங்க வேண்டும். 

Handbag

ஆரம்பரமான டிசைன் :
சிலருக்கு ஹேண்ட் பேக் வாங்கும்போது வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான விலை கொடுத்து ஹேண்ட் பேக் வாங்கிக்கொண்டு தனது தோழிகளிடம் இந்த ஹேண்ட் பேக்கின் விலை தெரியுமா என்று பெருமை தேடிக் கொள்வார்கள். ஆனால், இதெல்லாம் தேவையில்லாத செலவு. ஹேண்ட் பேக் தரத்திற்கும், அதன் டிசைன்க்கும் நாம் கொடுக்கின்ற விலை சரியானதா என்பதை யோசித்துப் பார்த்து வாங்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஆடம்பரமான டிசைன்களை கொண்ட பேக்குகளை வாங்கும் முடிவை கைவிட வேண்டும்.