"வாழைப்பழ சோம்பேறி" என்று கூறுவது எதனால்?.. அதன் அர்த்தம் என்ன?..!

"வாழைப்பழ சோம்பேறி" என்று கூறுவது எதனால்?.. அதன் அர்த்தம் என்ன?..!



Meaning of Tamil proverb Vazhaipazha Somperi

தமிழர்களின் பழமொழிகளை ஆராய்ந்து பார்த்து உண்மையை அறிந்துகொண்டால் அது வாழ்வியலுடன் ஒத்ததாக அல்லது எதிர்கால சிந்தனையுடன் அமைக்கப்பட்டு இருக்கும். இது தமிழர்களின் வரலாறு அறியப்பட்ட காலங்களில் இருந்தே இருக்கிறது. சில காலத்திற்கேற்ப புதிதாக இடம்பெற்றுள்ளது. 

இதில், வாழைப்பழ சோம்பேறி என்றால் என்ன அர்த்தம் என இன்று காணலாம். வாழைப்பழம் பிற பழங்களை ஒப்பிடுகையில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் பெருந்தடையின்றி கிடைக்கும். அதனை தோலுரித்து எளிதில் சாப்பிட்டு விடலாம். பலாப்பழம் சீசனுக்கு மிகுந்து கிடைக்கும். அதனை உரித்து சாப்பிட நேரம் ஆகும். 

மாம்பழம் எளிதாக சாப்பிடலாம் என்றால், அது சீசனுக்கு சாத்தியம். இதனால் வாழைப்பழம் சாப்பிட தேவையான அளவில் உள்ள உழைப்பை கூட கொடுக்காதவர்களை வாழைப்பழ சோம்பறி என வகைப்படுத்தி இருக்கின்றனர்.