மாத்திரைகளில் போடப்பட்டிருக்கும் இந்த சிவப்பு கோடு எதற்காக தெரியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

மாத்திரைகளில் போடப்பட்டிருக்கும் இந்த சிவப்பு கோடு எதற்காக தெரியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!



meaning-of-red-line-in-medicine-in-tamil

மாறிவரும் வாழ்க்கை முறை, டெக்னாலஜி உலகம், சரியான தூக்கம் இன்மை போன்றவற்றால் பல்வேறு வியாதிகள் நம்மை தொற்றிக்கொள்கிறது. குறிப்பாக ஒபிசிட்டி என கூறப்படும் உடல் பருமனால் இன்று பலர் பல்வேறு வியாதிகளை அனுபவித்துவருகின்றனர்.

சுகர் என்று சொல்லப்படும் சர்க்கரை வியாதி முன்பெல்லாம் குறைந்த அளவே இருந்தது. ஆனால், இன்று அந்த வியாதில் நம்மில் பலருக்கு உள்ளது. சில நேரங்களில் சாதாரண காய்ச்சல், தலைவலி என நினைக்கும் விஷயங்கள் கூட பூதாகரமாக வெடிக்கும் அபாயங்களும் நிகழத்தான் செய்கிறது.

health tips

அதிலும் குறிப்பாக மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் நாமே ஒருசில பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக்கொள்வது பலநேரங்களில் ஆபத்தில் கொண்டுபோய் விடுகிறது. பொதுவாக எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முறைப்படி மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைப்படி மருந்து மாத்திரை சாப்பிடுவதுதான் நல்லது.

அதிலும் குறிப்பாக சிவப்பு கோடு போடப்பட்ட மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் சாப்பிடவே கூடாது. அதற்கான எச்சரிக்கை குறியாகத்தான் சிலவகை மாத்திரைகளில் இதுபோன்ற சிவப்பு கோடுகள் போடப்பட்டுள்ளது.