நாவில் சுவையை தூண்டும் சுவையான மசாலா மீன் குழம்பு வைப்பது எப்படி...



Masala fish kulambu recipe

மணமணக்கும் சுவையில் சுவையான மசாலா மீன் குழம்பு வைப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
புளி – 150 கிராம்
இஞ்சி சிறிதளவு
பூண்டு – 10 பல்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
மிளகு – 1/4 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 4 ஸ்பூன்,
உப்பு
எண்ணெய் – 100 கிராம்
கடுகு – 1/2 ஸ்பூன்
வடகம் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழைMasala fish kulambu

 

முதலில் தண்ணீரில் புளியை சேர்த்து நன்கு ஊற வைத்து கொள்ளவும். பின் அந்த புளி கரைசலுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து தனியே வைத்து கொள்ளவும். அதன் பின்னர் 5 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்ட இஞ்சி, சோம்பு, சீரகம், மிளகு, மிளகாய்த்தூள், உப்பு, தனியா தூள் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை ஆகியவற்றை எடுத்து, மிக்சியில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்
கடுகு, வடகம், இரண்டு வரமிளகாய், தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

நன்கு வதங்கி வரும்போது அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து தொக்கு பதத்திற்கு வதக்கிக் கொள்ளவும்.இவையும் நன்றாக வதங்கிய பிறகு, அதனுடன் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.குழம்பு நன்றாக கொதித்ததும் அவற்றுடன் மீன் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து, மூடியால் மூடி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான மசாலா மீன் குழம்பு தயார்.