சந்திர கிரகணம் இந்தியாவில் நாளை எப்போது தொடங்குகிறது தெரியுமா? முழு விவரம்!

சூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது. அந்நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் என்கிறோம்.
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திரகிரகணம் நாளை இரவு தொடங்க உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் வெறும் கண்ணால் பார்க்க கூடிய அளவில் இந்த கிரகணம் தோற்றவுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை நாளை இரவு சரியாக 12.13 மணிக்கு தொடங்குகிறது.
இரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த கிரகணம் பின்பு, 1.31 மணிக்கு உச்சம் அடைந்து, இரவு 3 மணிக்கும், பின்னர், 4.30 மணிக்கு முடிகிறது. ஒட்டு மொத்தமாக சுமார் 5 மணி நேரம் இந்த கிரகணம் நடைபெறவுள்ளது.