உடல் எடையை குறைக்க வேண்டும்: ஜிம்மிற்கு பணம் கட்டியும் போகமுடியவில்லையா? உங்களை ஆர்வத்துடன் உடற்பயிற்சி செய்யவைக்க எளிய வழி!

உடல் எடையை குறைக்க வேண்டும்: ஜிம்மிற்கு பணம் கட்டியும் போகமுடியவில்லையா? உங்களை ஆர்வத்துடன் உடற்பயிற்சி செய்யவைக்க எளிய வழி!


lovable-health-workout

நம்மில் பலர் பார்க்கும் வேலையில், உடம்பை வருத்தி வேலை செய்யும் வாய்ப்பு அமைவதில்லை. அதே போல் தான், இல்லத்தரசிகளுக்கும் வேலை செய்வதற்கு அனைத்து தானியங்கி சாதனங்கள் வந்துவிட்டதால், அவர்களுக்கும் தேவையான உடற்பயிற்சி கிடைப்பதிலல்லை. இதனால் தான் உடல் எடை அதிகரிக்கிறது.

உடல் எடை அதிகரித்தாலோ, தொப்பை ஏற்பட்டாலோ அனைவரும் நினைப்பது,  ஜிம்முக்கு சென்று கடுமையான உடற்பயிற்சி செய்து, எப்படியாவது உடல் எடையை குறைக்கவேண்டும் என முடிவெடுப்பார்கள். ஆனால் ஜிம்மில் நீங்கள் ஒரு வருடத்திற்கான கட்டணத்தை செலுத்தினால், குறைந்த கட்டணம் என கூறி வருடத்திற்கு 10000 முதல் 20000 வரை பணம் செலுத்த வைக்கின்றனர்.

health tips

ஆனால், பணம் கட்டிவிட்டோமே என நினைத்து ஆரம்பத்தில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஆர்வமாய் செல்வார்கள். பிறகு உடற்சோர்வு, சோம்பேறித்தனம் ஏற்பட்டு மாதம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஜிம்மிற்கு செல்வார்கள். பிறகு ஜிம்மிற்கு பணம் கட்டியதையே மறந்துவிடுவார்கள்.

ஆனால் உடற்பயிற்சி செய்வதை ஆர்வத்துடன் செய்யவேண்டும். நம்மை அறியாமலே உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் ஊட்டும் ஒரு விளையாட்டு உள்ளது. அது தான் இறகு பந்து. காற்றடிக்காத இடத்தில் காற்று போல் சுழன்று சுழன்று ஆடுவது தான் இறகுபந்து விளையாட்டு.

health tips

இந்த விளையாட்டை தொடர்ந்து இரண்டு நாட்கள் விளையாடி பாருங்கள்.  பிறகு அந்த விளையாட்டு தினமும் அதிகாலையில் உங்களை விளையாட வரவைக்கும். ஆர்வத்துடன் இந்த விளையாட்டை விளையாடுவது மட்டுமின்றி, உடலில் உள்ள அணைத்து உறுப்புகளுக்கும் இந்த விளையாட்டு நன்மை பயக்கும்

இந்த விளையாட்டை தொடர்ந்து இரண்டு மாதங்கள் விளையாடி பாருங்கள், நீங்கள் இரண்டு வருடங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வரும் பலனை விட இது பலமடங்கு அதிக பலனை தரும்.