ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
கல்லீரல் பாதுகாப்பாக இருக்கணுமா! அப்போ 12 மணி நேரம் வயிறு காலியா இருக்கணும்! கண்டிப்பாக இதையெல்லாம் செய்யணும்! டாக்டரின் வீடியோ...
மனித உடலில் முக்கிய பங்காற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், உடல் முழுவதும் நன்றாக செயல்படும். அதனை சீராக வைத்திருக்க சில எளிய வழிமுறைகளை மருத்துவர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.
உணவின்றி இருக்கும் நேரம்
முதலில், தினமும் 12 மணி நேரம் உணவு எடுக்காமல் இருப்பது அவசியம். இதில் பாதி நேரம் இரவு தூக்கத்தில் கழியும். உதாரணமாக, இரவு 8 மணிக்கு உணவு எடுத்தால், மறுநாள் காலை 9 மணிக்கே அடுத்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இது கல்லீரலுக்கு ஓய்வையும், அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக இரவு வேலை செய்பவர்கள், நள்ளிரவுக்குப் பிறகு உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
உணவில் கவனிக்க வேண்டியவை
அடுத்ததாக, கார்போஹைட்ரேட் நிறைந்த மாவு உணவுகளை குறைப்பது முக்கியம். ஏனெனில் இவை கல்லீரலில் கொழுப்பு படிவதை அதிகரிக்கும். அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களை பயன்படுத்துவதும், நொறுக்கு தீனிகளுக்குப் பதிலாக பயறு வகைகளை சாப்பிடுவதும் நல்லது. மேலும், ஒவ்வொரு உணவிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
இதையும் படிங்க: பெண்களே எக்கச்சக்க எளிமையான கிட்சன் டிப்ஸ்! வீடியோவ பார்க்க மிஸ் பண்ணிட்டாத்தீங்க.....
இந்த எளிய மாற்றங்களை வாழ்க்கை முறையில் எடுத்துக்கொள்வதன் மூலம், கல்லீரலை நீண்டநாள் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். ஆரோக்கியமான உணவும், ஒழுங்கையான பழக்கவழக்கமும் தான் நல்ல வாழ்வின் அடித்தளம்.
இதையும் படிங்க: இவன் தாங்க டிசைன்னர்! ஜப்பான் தபால் பெட்டியை பார்த்துள்ளீர்களா? பாருங்க... ஷாக் ஆகிடுவீங்க.... வைரல் வீடியோ!