ஷாக் நியூஷ்! அழகா? ஆரோக்கியமா? கண்ணுல வச்ச மை, கடைசில ஆபரேஷன்ல கொண்டு போயிடுச்சே...! காஜல் பிரியர்களே மிஸ் பண்ணாம பாருங்க...!!!



kajal-eye-health-risks-doctors-warning

கண்களின் அழகை மேம்படுத்த பல பெண்கள் தினமும் பயன்படுத்தும் காஜல், கவனக்குறைவாக பயன்படுத்தப்பட்டால் கண்களின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சரும நல மற்றும் கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக தரம் குறைந்த தயாரிப்புகள் மற்றும் தவறான பயன்பாடு சில நேரங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் காஜல் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், கண்களின் உட்புற விளிம்பில் அதை பூசுவதால் அங்குள்ள நுண்ணிய சுரப்பிகளின் துவாரங்கள் அடையும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் கண்களில் கட்டி, அரிப்பு, அலர்ஜி, கண் வறட்சி மற்றும் கண் தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: வயிற்று பிரச்சனை இருக்குதா? கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..! 

அறுவை சிகிச்சை வரை செல்லும் அபாயம்

தகவலின்படி, சுரப்பி அடைப்பு நீண்ட நாட்கள் நீடித்தால் கட்டிகள் தானாக கரையாமல் போகும். இதையடுத்து அவற்றை அகற்ற சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலும் உருவாகலாம். மேலும் சந்தையில் விற்கப்படும் சில காஜல்களில் ஈயம் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதால், அவை பார்வைத் திறனையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கண்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

எப்போதும் தரமான, ரசாயன கலப்பு குறைவான மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட காஜலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கண்களின் உட்புற விளிம்பில் பூசுவதைத் தவிர்த்து, வெளிப்புற இமை முடியின் ஓரத்தில் மட்டுமே லேசாகப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அதேபோல், இரவில் தூங்குவதற்கு முன் காஜலை முழுமையாக அகற்றுவதும், பிறரின் காஜலை பயன்படுத்தாமலும், தங்களுடைய காஜலை மற்றவர்களுடன் பகிராமல் இருப்பதும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: புரோட்டீன் அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்குமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?!