BREAKING: ஸ்டாலினை சந்தித்த புதிய புரட்சி கழகம்..! ஒரே நாளில் மாறிய அரசியல் கணக்கு... மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் புதிய படை! அதிர்ச்சியில் ஆளுங்கட்சி...!!!



puthiya-puratchi-kazhagam-supports-dmk-alliance-by-elec

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு புதிய புரட்சி கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். கூட்டணி வேட்பாளர்களுக்காக தங்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும் உறுதியளித்தனர்.

ஸ்டாலினை சந்தித்த புதிய புரட்சி கழக நிர்வாகிகள்

புதிய புரட்சி கழகத்தின் தலைவர் ஓ.இ.சங்கர், பொதுச்செயலாளர் கோல்டன் கோபி ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக கட்சி நிர்வாகிகள் களப்பணியில் ஈடுபடுவார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஒரு எம்.பி. சீட்டுக்காகத்தான் வந்தார்கள்.. தேமுதிக குறித்து வன்னி அரசு பரபரப்பு பேட்டி!

தேர்தல் பணியில் முழு ஒத்துழைப்பு

துணைப் பொதுச்செயலாளர் தரமணி வேலு, தலைமை நிலையச் செயலாளர் மடையத்தூர் துரைசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.ஹரிகிருஷ்ணன், கொள்கைப் பரப்புச் செயலாளர் வழக்கறிஞர் கேட் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்திப்பில் கலந்துகொண்டனர். மேலும், கமலஹாசன் செல்வமணி, உமா மகேஷ்வரன், மாநிலச் செயலாளர் அஜிஸ்ராசா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் களம்

மாவட்டச் செயலாளர் மதுராந்தகம் ஜி.கே.சேகர், மாவட்டத் தலைவர் வி.எம்.மாரிமுத்து, பொருளாளர் இளங்கோ, அமைப்பாளர் மணிகா மற்றும் பனையூர் பாபு உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த சூழலில் புதிய புரட்சி கழகம் தெரிவித்துள்ள ஆதரவு, அத்தொகுதிகளில் நடைபெறும் கூட்டணி அரசியல் நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள புதிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: நான் சொன்னது வேறு.. பிரேமலதா புரிந்துகொண்டது வேறு.. திருமாவளவன் விளக்கம்!