அதிர்ச்சி! சிகரெட்டை விட ஊதுபத்தி புகையால் புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகம்! ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!



incense-smoke-more-dangerous-than-cigarette

 மழைக்காலம் தொடங்கி, நாக பஞ்சமி போன்ற பண்டிகைகள் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் மத சடங்குகள் நடைபெறுகின்றன. இத்தகைய நேரங்களில், பெரும்பாலானோர் தூபக் குச்சி (ஊதுபத்தி) ஏற்றி வீடுகளில் நறுமணத்துடன் ஆன்மிக சூழலை உருவாக்குகிறார்கள்.

ஆனால், இதனால் ஏற்படும் புகை நம்மை மகிழ்ச்சியாக உணர வைக்கும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, அது உயிருக்கு ஆபத்தாக இருக்கலாம் என அறிவியல் ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாயுள்ளது.

தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சீன புகையிலை குவாங்டாங் சிந்து ரயில்வே நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வின் படி, தூபக் குச்சி புகை என்பது சிகரெட் புகையை விட அதிக தீங்கு விளைவிப்பதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பில் சிறிய மாற்றம் ! அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

அந்த ஆய்வில், தூபத்திலிருந்து வெளியேறும் புகையில் 99% அல்ட்ரா ஃபைன் மற்றும் நுண்ணிய துகள்கள் இருந்ததை கண்டறிந்துள்ளனர். இத்தகைய நச்சு துகள்கள் உடலின் செல்ல்களில் புற்றுநோய், வீக்கம், மற்றும் எரிச்சல் ஆகிய பிரச்சனைகளை உருவாக்கக்கூடியவை.

புகையால் ஏற்படும் பாதிப்புகள்:

நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

மியூட்டஜெனிக், ஜெனோடாக்ஸிக், சைட்டோடாக்ஸிக் ஆகிய நச்சுப் பொருட்கள் இருப்பது

கண்களில் அரிப்பு, தோலில் ஒவ்வாமை, காற்றுப்பாதையில் எரிச்சல்

பார்வை இழப்பு அபாயம்

இந்த ஆய்வு வெளியானதுடன், தூபக் குச்சிகளை எரிப்பது ஆன்மிக செயல் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கு பாதிப்பான ஒரு பழக்கம் என்றும் மக்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

 

இதையும் படிங்க: என்னது.. பிக்பாஸ் சீசன் 9 தொடங்கவுள்ளதா! அரசல்புரசலாக வெளியான நியூ அப்டேட்! எப்போது ஆரம்பம்? ரசிகர்கள் ஆர்வத்தில்.....