செவ்வாழைப்பழம் பிரியரா நீங்கள்.. அட இவ்வளவு நன்மைகள் இருக்கின்றதா என்று நீங்களே ஆச்சரியப்படுவீங்க.!

வாழைப்பழங்களில் செவ்வாழைப்பழம் மிகவும் சிறப்பு வாய்ந்த பழமாகும். இந்த செவ்வாழை பழமானது தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த செவ்வாழை பழத்தினை தினமும் நாம் உட்கொண்டு வருவதால் நம் உடலில் நல்லவிதமான மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அவை என்னவென்றால் 1) செவ்வாழை பழத்தினை நாம் தினமும் உட்கொண்டு வந்தால் நம் சருமத்தில் உள்ள துளைகளை அகற்றி சருமத்தை இறுக்கமாகவும் மீள் தன்மையுடனும் வைத்திருக்க உதவுகிறது. 2) இந்த செவ்வாழை பழத்தில் காணப்படும் பீட்டா கரோட்டின் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
3) மேலும் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இந்த செவ்வாழை பழத்தினை உட்கொண்டு வந்தால் இதில் உள்ள பொட்டாசியம் இதயத்துடிப்பை குறைத்து உடலின் நீர் சமநிலையை சீராக்கும். மேலும் இந்த செவ்வாழை பழத்தில் குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நம் உடலுக் தேவையான சக்தியை கொடுக்கின்றது.
4) அது மட்டுமல்லாமல் செவ்வாழை பழத்தில் வைட்டமின் - பி6 உள்ளதால் அதனை நாம் உட்கொள்ளும்போது நம் உடலில் ரத்தத்தின் தரம் மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.