இட்லி மாவு விற்று கோடிக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி ? வளர்ச்சிக்கான காரணத்தை பாருங்க....



id-fresh-success-story-kerala-to-crore-brand

கேரளாவை சேர்ந்த ஐந்து உறவுகள் சேர்ந்து வெறும் ரூ.50,000 முதலீட்டில் தொடங்கிய ஒரு சின்ன முயற்சி, இன்று ரூ.600 கோடி மதிப்புடைய பிரபலமான உணவு தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது. இது தான் iD Fresh Food நிறுவனத்தின் வெற்றிக்கதை.

50 சதுரஅடி வீட்டில் துவங்கி  தொழிற்சாலை வரை

2005ஆம் ஆண்டு, முஸ்தபா மற்றும் அவரது உறவினர்கள் ஷம்சுதீன், அப்துல் நாசர், ஜாஃபர், நுசாட் ஆகியோர் சேர்ந்து பெங்களூருவில் 50 சதுரஅடி வீட்டில் இட்லி, தோசை மாவுகளை தயார் செய்து, ஆரம்பத்தில் 20 கடைகளுக்கு தினமும் 10 பாக்கெட்டுகள் வீதம் விநியோகிக்கத் தொடங்கினர். மக்களிடையே மாவு விரைவில் பிரபலமடைந்ததால், அவர்கள் 800 சதுர அடி இடத்தில் ரூ.6 லட்சம் செலவில் தொழிற்சாலை அமைத்தனர்.

iD Fresh

வளர்ச்சியின் முக்கிய அடித்தளம்

இந்த மாவுகள் எந்தவித கெமிக்கலும் இல்லாமல், தூய்மையாக தயாரிக்கப்படுவதால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றது. அதன் சுவை, தரம் ஆகியவை பெங்களூருவில் பரபரப்பாக வாழும் மக்களுக்கு ஏற்றதாக இருந்தது. 2008இல் ஹோஸ்கோட்டில் ரூ.40 லட்சம் முதலீடு செய்து தொழிற்சாலை கட்டப்பட்டது. 2009இல் கூடுதலாக ரூ.30 லட்சம் முதலீடு செய்து, தயாரிப்பு தினமும் 2,000 கிலோவை எட்டியது.

இதையும் படிங்க: உலகிலேயே மிக வேகமாக வளரும் மதம் எது தெரியுமா? கடந்த 10 வருட கணிப்பு அறிக்கை வெளியீடு!

பெரிய முதலீடுகளும் வளர்ச்சியும்

2014இல் Helion Venture Partners நிறுவனம் ரூ.35 கோடி முதலீடு செய்தது. பின்னர் 2017இல் Premji Invest நிறுவனம் ரூ.170 கோடி முதலீடு செய்து 25% பங்குகளை பெற்றது. இவற்றால் iD Fresh Food நிறுவனம் ரூ.600 கோடி மதிப்பை எட்டியது.

iD Fresh

தனித்துவமான பொருட்கள் & விற்பனை

பரோட்டா மாவு, சட்னி, ஸ்பெஷல் மாவு ஆகியவை அதிக வருமானத்தை ஈட்டுகின்றன. சட்னியில் மட்டும் மாத வருமானம் ரூ.1.5 கோடி, ஸ்பெஷல் மாவு ரூ.1 கோடி, பரோட்டா மாவு ரூ.50 லட்சம் என்று கணிக்கப்படுகிறது.

டேட்டா தொழில்நுட்பமும் சர்வதேச அங்கீகாரமும்

வாடிக்கையாளர்கள் எப்போது, எவ்வளவு மாவு வாங்குவார்கள் என்பதை கணிக்க, iD Fresh ஒரு தனி டேட்டா மாடல் உருவாக்கியுள்ளது. இந்த மாடல் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் case study-ஆக கற்பிக்கப்படுகிறது.

ஒரு சின்ன முயற்சி, நேர்மையும் தரமும் இருந்தால் உலகத்தையே கவனிக்க வைக்கும் என்பது iD Fresh Food நிறுவனத்தின் வெற்றிக்கதை மூலம் நிரூபிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஊக்கமான startup சான்றாகவும், பலருக்குமான முன்மாதிரியாகவும் திகழ்கிறது.

 

இதையும் படிங்க: உலகிலேயே மிக வேகமாக வளரும் மதம் எது தெரியுமா? கடந்த 10 வருட கணிப்பு அறிக்கை வெளியீடு!