குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பு அபாயம்.. மறந்தும் இதையெல்லாம் செய்யாதீர்கள்.!

குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பு அபாயம்.. மறந்தும் இதையெல்லாம் செய்யாதீர்கள்.!



How to prevent heart Attack

குளிர்காலங்களில் மரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உடலில் எபிநெஃப்ரின் மற்றும் கார்டிசோல் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது.

இதனால் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதயத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி அதிகரித்த ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரிப்பதால் இதயத்தில் அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Cold Season

உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீண்ட கால நுரையீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் மரணிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. குளிர்ச்சியானது உடலில் உள்ள ரத்த நாளங்களை சுருக்கி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அதன் காரணமாக இதயத்தின் நரம்புகளில் ரத்த ஓட்டம் குறைகிறது. ரத்த ஓட்டத்தை சரி செய்ய இதயம் கடினமாக உழைப்பதால், அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு ஏற்படுகிறது.

எனவே குளிர்காலத்தில் சிலவற்றை நாம் செய்யாமல் இருந்தால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். எனவே, கடும் குளிரில் நடைபயிற்சி செய்யக்கூடாது, அதேபோல் கடுமையான உடற்பயிற்சி செய்யக்கூடாது. ஜங்க் ஃபுட் உணவுகளை அதிக அளவில் உண்ணக்கூடாது. 

Cold Season

குறிப்பாக நன்றாக தூங்க வேண்டும். ஒரு நாளைக்கு 9 மணி நேரம் தூங்க வேண்டும். நல்ல தூக்கம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். புல் மீது வெறுங்கலுடன் நடப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.

அதேபோல் காலை உணர்வை தவிர்க்கக்கூடாது. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலையில் தியானம் செய்வது இதயத்திற்கு நல்ல அமைதி மற்றும் மனநிலையை கொடுக்கும்.