குட்டீஸுக்கு பிடித்த வெங்காய பொடி தோசை வீட்டில் செய்து அசத்துவது எப்படி?... டிப்ஸ் உங்களுக்குத்தான்.!



How to Prepare Vengaya Dosa Tamil

நமது வீட்டில் எப்போதும் ஒரே வகையான தோசை செய்வதால், குழந்தைகள் வேறு விதமான தோசை கேட்டு அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு பிடித்த வகையில் வெங்காய பொடிதோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கிண்ணம்,

இட்லி பொடி - 1 பாக்கெட், 

வெங்காயம் - 2,

கொத்தமல்லி தலைகள் - சிறிதளவு,

எண்ணெய் - தேவையான அளவு.

Onion podi dosa

செய்முறை:

★முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், கொத்தமல்லி தலைகளை பொடிப்படியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

★பின்னர் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கல் சூடேறியதும் தோசை மாவை ஊற்றி மெல்லிய தோசை போல நிரப்பவும்.

★அந்த மாவின் மீது வெங்காயம், கொத்தமல்லி நறுக்கியதை மழைச்சாரல் போல் தூவி, பின்னர் இட்லி பொடியை தூவி எண்ணெய் சேர்த்து தோசை போல திருப்பித்திருப்பி போட்டு எடுத்தால் சுவையான வெங்காய பொடிதோசை தயார்.

★கேரட் சேர்க்க விருப்பமுள்ள உணவு விரும்பிகள் அதனையும் வெங்காயத்துடன் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.