ஆருத்ரா ஸ்பெஷல்: திருவாதிரை களி செய்வது எப்படி?.. சிவபக்தர்களே மறந்துடாதீங்க..!

ஆருத்ரா ஸ்பெஷல்: திருவாதிரை களி செய்வது எப்படி?.. சிவபக்தர்களே மறந்துடாதீங்க..!



 How To Prepare Thiruvathira Kali Recipe Tamil 

களி என்றால் பிடிக்காது என்போரை விரல்விட்டு எண்ணிவிடலாம். உளுந்தங்களி, கேழ்வரகு களி என பல வகைகள் இருக்கின்றன. உடலுக்கு பல சத்துக்களை வழங்கும் களியில் ஆருத்ரா தரிசமான இன்று இறைவனுக்கு களி படைத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்: 
பச்சரிசி - 2 கிண்ணம்,
வெள்ளம் - 400 கிராம்,
துருவிய தேங்காய் - கால் கிண்ணம்,
முந்திரி, திராட்சை - தேவையான அளவு,
நெய் - அரை கிண்ணம்,
ஏலக்காய் பொடி - தேவையான அளவு. 

Lifestyle

செய்முறை: 

முதலில் எடுத்துக்கொண்ட பச்சரிசியை கடாயில் இட்டு 10 நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும். பச்சரிசி ஆறியதும் நன்றாக அரைத்து எடுத்து, மாவை சலித்து வைத்து கொள்ளவும். பின் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, பச்சரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும். 

சற்று களி பதம் வந்ததும் வெண்ணீரில் அரை கப் அளவு ஊற்ற வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்ந்து பாகு காய்ச்சி எடுக்க வேண்டும். பாகு தயாரானதும் அரிசி மாவு கலவை மற்றும் வெல்லப்பாகை ஒன்றாக சேர்ந்து 15 நிமிடம் வரை வேகவிட வேண்டும். இறுதியாக ஏலக்காய்பொடி சேர்த்துக்கொள்ளலாம். 

இவை தயாரானதும் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்றவற்றை சேர்ந்து கிளறி இறக்கினால் களி கிடைக்கும். இதனை ஆருத்ரா நாளை சிறப்பிப்போர் இறைவனுக்கு வைத்து படைத்துவிட்டு குடும்பத்தினர், நண்பர்களுக்கு கொடுத்து தாமும் சாப்பிடலாம். இதனால் நமது உடல் நலம்பெறும்.