உடலுக்கு பல்வேறு நன்மையளிக்கும் திணை சர்க்கரைப்பொங்கல்.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திணை சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - 1/4 டம்ளர்
தண்ணீர் - 4 1/2 டம்ளர்
வெல்லம் - 1 டம்ளர்
ஏலக்காய் - 4
தேங்காய் துருவல் - 1/4 டம்ளர் முந்திரிப் பருப்பு - 8
திணை - 1 டம்ளர்
செய்முறை :
★முதலில் பாசிப்பருப்பு மற்றும் திணையை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
★ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்தவுடன் பாசிப்பருப்பை போட்டு வேகவைக்கவும்.
★பாதி வெந்தபின்னர் திணை அரிசியை போட்டு மீதமுள்ள மூன்றரை குவளை தண்ணீரை ஊற்றி அடிபிடிக்காமல் கிளறிகொண்டே இருக்க வேண்டும்.
★அடுத்து தூளாக்கிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிய அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
★பின் முந்திரிப் பருப்பை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
★பாசிப்பருப்பும் தினை அரிசியும், நன்றாக வெந்து, குழையும் பதத்திற்கு வந்தவுடன் தூளாக்கிய வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
★இறுதியாக 5 நிமிடம் வரை அடுப்பில் வைத்து, அடுப்பை அணைத்து ஏலக்காய் தூள்,முந்திரி பருப்பு சேர்த்து கிளறி பரிமாறினால் சூப்பரான திணை சர்க்கரை பொங்கல் தயாராகிவிடும்.