இருமல், சளியை போக்கும்.. மிளகு சீரக சாதம்.. டக்குனு இப்படி செய்யலாம் வாங்க.!



How to prepare milagu and seeraga rice

சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் மிளகு சீரக சாதத்தை எளிமையாக எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

தேவையான பொருட்கள்:

பெருங்காயம் - சிறிதளவு

புழுங்கலரிசி சாதம் - 2 கப்

சீரகம் - 2 டீஸ்பூன்

மிளகு -3 டீஸ்பூன்

நெய் - 3 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 1 கப்

உப்பு - தேவைக்கேற்ப

முந்திரிப்பருப்பு - சிறிது

மிளகாய் - 2

வெங்காயம்-1

கடுகு, கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்க

கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்

Life style

செய்முறை :

அரிசியை சாதமாக வடித்து குழையாமல் எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு பெருங்காயம், கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் உள்ளிட்டவற்றை சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும். 

அதன்பின் அதில் மிளகு சேர்த்து வறுத்து கருவேப்பிலையை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின் ஏற்கனவே குருவி வைத்துள்ள தேங்காயை அதில் சேர்த்து லேசாக வதக்கி இறக்கி ஆறவிடவும்.

Life style

பின்னர் இவற்றை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும். பின், வாணலியில் நெய்யை விட்டு, கடுகு கடுகு சேர்த்து கடுகு வெடித்தவுடன் அதில் முந்திரி பருப்பை சேர்த்து லேசாக வறுத்து சிவந்தவுடன் அதில் ஒரு கொத்து கருவேப்பிலையை போட்டு கிளறவும். 

பின்னர் அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை போட்டு கிளறி ஏற்கனவே அழைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான ஆரோக்கியமான மிளகு சீரக சாதம் ரெடி.