தூங்கும்போது ஏன் மொபைல் போன் யூஸ் பண்ணகூடாது தெரியுமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க...

இரவில் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்
இன்றைய தொழில்நுட்ப உலகத்தில், சமூக ஊடகங்களின் வளர்ச்சி வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, மொபைல் போன் பயன்படுத்தும் நேரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பெருகியுள்ளது. இன்று மொபைல் போன் ஒரு தவிர்க்க முடியாத சாதனமாக மாறியுள்ளது.
செல்போன் பாவனையின் அத்தியாவசியமும் ஆபத்தும்
தொலைபேசி பயன்பாடு அவசியமானதாக இருந்தாலும், அதன் அளவுக்கு அதிகமான பயன்பாடு பலவிதமான உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, இரவு நேரங்களில் படுக்கையில் மொபைலைப் பயன்படுத்துவது ஆபத்தான விளைவுகளை தரும்.
தூக்கத்தை பாதிக்கும் நீல ஒளி
மொபைல் திரையில் இருந்து வரும் நீல ஒளி, தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியை குறைக்கும். இதனால் தூக்கவிலக்கு, சோர்வு, மற்றும் அன்றாட வேலைகளில் கவனம் சிதறுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதையும் படிங்க: Y குறி கைரேகை.. உங்கள் உள்ளங்கையில் Y குறி இருக்கா? அப்போ 2025 இன் அதிர்ஷ்டசாலிகள் நீங்கள் தான்! முழு விபரம் உள்ளே..
தூக்கத்தின் இடையூறாக அறிவிப்புகள்
படுக்கையில் போனைக் கொண்டு செல்லும் போது, குறுஞ்செய்திகள் அல்லது அழைப்புகளால் ஏற்படும் ஒலிகள் தூக்கத்தை குறுக்கி, தூக்கத்தின் தரத்தையும் கால அளவையும் பாதிக்கும்.
கதிர்வீச்சின் நீண்டகால விளைவுகள்
மொபைல் கதிர்வீச்சுகள் குறைவாகவே கருதப்படினும், நீண்ட காலத்தில் இந்த வெளிப்பாடுகள் உடல்நல பாதிப்புகள் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.
நீரிழிவுக்கும் தொடர்பு
போதுமான தூக்கம் இல்லாமல் இருந்தால், இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படலாம். இது நீரிழிவு நோய் உருவாவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. இரவில் போனை விலக்கி தரமான தூக்கம் பெறுவது, வளர்சிதை மாற்றம் நோய்கள் ஆகியவற்றை தவிர்க்க உதவும்.
கண்களின் சோர்வு மற்றும் தலைவலி
இரவில் நீண்ட நேரம் மொபைல் திரையைப் பார்க்கும் பழக்கம், கண் வலி, கண் வறட்சி, தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இரவில் மொபைலை தவிர்ப்பது கண்களுக்கு ஓய்வை தரும்.
இதையும் படிங்க: நகங்களின் நிறம் மாறுவது ஏன் தெரியுமா? இந்த நோய்கள் இருந்தால் இப்படியெல்லாம் நிறம் மாறுமாம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க...