உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொள்ளு கார பொங்கல்..  வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!

உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொள்ளு கார பொங்கல்..  வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!


how to prepare kollu kara pongal

உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு கார பொங்கல் வீட்டிலேயே எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.

கொள்ளுவில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதச்சத்து நிறைந்துள்ளது .இதனை தினமும் உண்பதன் மூலம் உடல் தசைகளின் வலிமை அதிகரிக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளையும் சரிப்படுத்த இயலும்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 100 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கொள்ளு - 50 கிராம்
பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
மிளகு, சீரகம் - அரை தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2 

செய்முறை :

முதலில் கொள்ளுவை 10 மணிநேரம் நன்கு ஊறவைக்க வேண்டும்.

பின் இஞ்சியை தோல்நீக்கி, பச்சைமிளகாயை  பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

அடுத்து கொள்ளு, அரிசி இரண்டையும் நன்கு கழுவி தனித்தனியே வேகவிட வேண்டும்.

வெந்தபின் கொள்ளு, அரிசி இரண்டையும் சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மசிக்க வேண்டும்.

இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளு கலவையில் சேர்த்து நன்கு கலந்து பரிமாறினால் கொள்ளு கார பொங்கல் தயாராகிவிடும்.