த்ரிஷாவை விட வயது குறைவு... ஆனால் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை! யார் தெரியுமா?
நார்ச்சத்து நிறைந்த காராமணிக்காய் பொரியல் செய்வது எப்படி?.. வாங்க பார்க்கலாம்..!!

இன்று சுவையான காராமணிக்காய் பொரியல் செய்வது குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள் :
காராமணி - 200 கிராம்
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
கடுகு - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
கருவேப்பிலை - கைப்பிடி அளவு
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக் கொண்ட காராமணியை நன்றாக சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
★இதனை அடி கனம் கொண்ட பாத்திரத்தில் சேர்த்து எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்க வேண்டும்.
★பின்னர் அடுப்பை வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
★அதில் வதக்கிய காரமணியை சேர்த்து மசாலாவுடன் 15 நிமிடம் மிதமான தீயில் கிளற சுவையான காராமணிகாய் பொரியல் தயார்.
குறிப்பு :
காராமணிக்காயில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், போலிக் அமிலம் போன்ற நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.