முட்டை லாலிபாப் சாப்பிட்டு இருக்கீங்களா.? செம்மையா இருக்கும் சாப்பிட்டு பாருங்க.!

முட்டை லாலிபாப் சாப்பிட்டு இருக்கீங்களா.? செம்மையா இருக்கும் சாப்பிட்டு பாருங்க.!


How to make egg lollipop

முட்டை லாலிபாப்  செய்வது எப்படி என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு

பிரட் தூள் - தேவையான அளவு

மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1/4 டீ ஸ்பூன்

கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

தனியா தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

வெங்காயம் - 1

முட்டை - 4

Egg Lalipop

செய்முறை :

முட்டையை நன்றாக முதலில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதை இன்னொரு பாத்திரத்தில் துருவிக் கொள்ளவும். அடுத்தபடியாக ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் துருவிய முட்டைகளை போட்டு பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, பிரட் தூள், உப்பு சீரகத்தூள், கரம் மசாலா தூள், தனியா தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி உள்ளிட்டவற்றை போட்டு லேசாக தண்ணீர் விட்டு உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.

இப்போது இன்னொரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு, மிளகு தூள் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, முட்டை கலவையில்  பிரட்டி, அதன் பின்னர்  பிரட் துளியிலும்  பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

Egg Lalipop

தற்போது அடுப்பில் ஒரு  கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன் ஒவ்வொரு உருண்டைகளாக அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்தால். சுவையான முட்டை லாலிபாப் தயாராகிவிடும். அந்த லாலிபாப் மீது டூத் ஸ்டிக் குத்தி பரிமாறலாம்.